மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 ஆறாம் நாள் ( 25.12.2014) |
Manampitiya Floods -December 2014 Sixth Day ( 25.12.2014)
இன்று நீர் மட்டம் குறையும் என அனைவரும் எதிர்பார்த்திருநதனர். ஆனால், இன்று மதியம் முதல் நீர்மட்டம் வெனகு விரைவாக அதிகரிப்பதனைக் காணக் கூடியதாக இருந்துது.
வெள்ளம் தொடர்பான காணொளியைப் பார்க்க.....
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 பகுதி I | Manampitiya Floods Part- I
மன்னம்பிட்டியில் வெள்ளம் - 2014 ஆறாம் நாள் ( 25.12.2014) |
Manampitiya Floods -December 2014 Sixth Day ( 24.12.2014)
இன்று நீர் மட்டம் குறையும் என அனைவரும் எதிர்பார்த்திருநதனர். ஆனால், இன்று மதியம் முதல் நீர்மட்டம் வெனகு விரைவாக அதிகரிப்பதனைக் காணக் கூடியதாக இருந்துது.
இன்றுடன் ஆறாம் நாளாக வெள்ளம் காணப்பட்டாலும், இன்று நீர் மட்டம் வெகு விரைவாக அதிகரிப்பதனால், இன்னும் பல குடும்பங்கள் அகதிகளாக இடம் பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான சங்காபிசேகம் - 2014
மன்னம்பிட்டி, ( ஸ்ரீ லங்கா) அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் கடந்த எட்டாம் திகதி (08.10.2014) அன்று பௌர்ணமி தினத்தில் சங்காபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனை ஆலய பூசகர் குழந்தைல் ஐயா அவர்களும், சுதர்சன் சர்மா அவர்களும், நிரோஜன் சர்மா அவர்களும் நடத்தி வைத்தனர்.
உங்களுக்காகச் சில படங்கள்....
சங்காபிசேகம் - 2014
சங்காபிசேகம் - 2014
சங்காபிசேகம் - 2014
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
பூசைப் பொருட்களை அலய பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்கள் பக்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றார்.
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்களும்,
நாயகன் அஸ்வின் படித்து முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலை
கிடைக்காமல் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தந்தை போலீஸ்
அதிகாரியான விஜயகுமாரிடம் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
ஒருநாள் அஸ்வின் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும்போது எதேச்சையாக நாயகி
சிருஷ்டியை பார்க்கிறான். அவளைப் பார்த்தவுடனேயே அவள் மீது காதலும் கொள்கிறான்.
அப்போது பெய்யும் மழையில் இருவரும் நெருக்கமாக நின்று ஒருவரையொருவர்
அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
இந்நிலையில், சிருஷ்டியின் அண்ணன் திருமணத்துக்கு அஸ்வின் போட்டோ எடுக்க
போகிறார். சிருஷ்டிக்கு 2 அண்ணன்கள். 2-வது அண்ணனுக்கு நடக்கும் கல்யாணத்திற்கு
வந்திருக்கும் மூத்த அண்ணன், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம்
செய்துகொண்டதால் அந்த குடும்பமே அவரை வெறுத்து ஒதுக்குகிறது.
இதுதெரியாத அஸ்வின், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ
எடுக்கிறார். இதனால், சிருஷ்டியின் குடும்பத்திற்கு மூத்த அண்ணன் மீதிருந்த கோபம்
சற்று தணிகிறது. இதற்கு காரணமாக இருந்த அஸ்வின் மீதும் தனிஈர்ப்பு உருவாகிறது.
இதை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு சிருஷ்டியிடம் சென்று காதலை சொல்கிறார்
அஸ்வின். அவளும் அஸ்வினின் உண்மையான காதலை புரிந்துகொண்டு ஒத்துக்கொள்கிறார்.
இருவரும் காதல் ஜோடிகளாக உலா வருகின்றனர்.
ஒருநாள் இவர்களை சிருஷ்டியின் மூத்த அண்ணன் நேரில் பார்த்துவிடுகிறார். அப்போது,
இவர்களை கண்டித்து செல்கிறார். இருந்தாலும், இருவரும் யாருக்கும் தெரியாமல் காதல்
செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், விஜயகுமார் மூலமாக போலீசில் தடவியல் நிபுணர் பணி அஸ்வினுக்கு
கிடைக்கிறது. வேலை கிடைத்த மாத்திரத்தில் விஜயகுமாருக்கு கமிஷனராகும் அறிவிப்பு
வருகிறது. மறுநாள் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது.
ஊடகங்கள் தற்கொலை என்று சொல்லி வரும்வேளையில், தடவியல் நிபுணரான அஸ்வின் அது
தற்கொலை இல்லை கொலைதான் என்று கண்டுபிடிக்கிறார். அதை நிரூபிப்பதற்காக அவரை கொலை
செய்யப்பட்டதற்கான காரணங்களை கண்டுபிடிக்கிறார் அஸ்வின்.
இந்த தகவல்களையெல்லாம் திரட்டி உயரதிகாரியிடம் சமர்பிக்க ரெடியாக இருக்கும்போது
சிருஷ்டியை மர்ம கும்பல் ஒன்று கடத்துகிறது. அஸ்வின் திரட்டி தகவல்களை எங்களிடம்
ஒப்படைத்தால்தான் சிருஷ்டியை விடுவிப்போம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.
இறுதியில் அஸ்வின் தான் திரட்டிய தகவல்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்து
சிருஷ்டியை மீட்டாரா? அந்த மர்ம கும்பலுக்கும் அஸ்வின் திரட்டிய தகவல்களுக்கும்
என்ன சம்பந்தம்? என்பதை விளக்கி கூறியிருக்கிறார்கள்.
நாமெல்லோரும் ஒரே நாளில் பணக்காரராகி செல்வத்துடன் வாழவே விரும்புகின்றோம்...... அதற்காக உழைக்க யாரும் முன்வருவதில்லை..... தமிழ்த் திரைப்படங்களில் அவ்வப்போது சிறந்த கருத்துக்களை முன்வைக்கின்றனர்... ஆனால், நாம் அவற்றினைக் கருத்தில் கொள்வதில்லை......
மாயக்கண்ணாடி திரைப்படத்தினை எத்தனை பேருக்கு நினைவிருக்குமோ தெரியாது.... இருந்தும் நீங்கள் இதனை ஒருமுறை பாருங்கள்..... உங்கள் தவறுகளைத் திருத்தி முன்னேறுங்கள்.....
இணைப்பு : http://www.youtube.com/watch?v=X1MYCLhULtA
ஜய புதுவருட நாள் வேலை புதுவருட தினத்தன்று கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பூசகர் அவர்ளால் தொடக்கி வைக்கப்பட்து. அதில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.நாகராசன் அவர்களும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்
ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்
ஜய வருடப் பிறப்பினை முன்னிட்டு திம்புலாகலை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட விளையாட்டு விழாவின் ஒரு பகுதியான தேணி விடுதல் போட்டி மன்னம்பிட்டிக் குளத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. பெருந்தொகையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியை மன்னம்பிட் மீன்பிடிச் சங்கம் முன்றின்று நடத்தியது.
விமானத்தின் கறுப்புப் பெட்டியை எப்படிச் செய்கின்றனர் ( உருவாக்குகின்றனர்) எனப் பாருங்கள்....
இக் காலப் பகுதியில் அனைவரது பேச்சிலும் அடிபடும் ஒரு விடயம் விமானத்தின் கறுப்புப் பெட்டி. இதனை எவ்வாற செய்கின்றனர். இக் கறுபுப் பெட்டி எவ்வாறெல்லாம் சோதனை செய்யப்படுகின்றது. அதிலிருந்து எவ்வாறு தகவல்களைக் கண்டறிகின்றனர் என முழுமையான அறிவைப் பெற இக் காணொளியினைப் பாருங்கள்....