கதைச்சுருக்கம்:
ஏழாம் அறிவு ( தமிழ்த் திரைப்படம்)
ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிரத்தில் வாழ்ந்த போதி தர்மர் (சூர்யா), அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்குக் களரியைக் கற்றுக் கொடுக்கிறார். புத்தமதத்தின் புதிய பிரிவைத் தோற்றுவிக்கிறார்.
அவரது பரம்பரையில் வந்த சாகசக் கலைஞரான அரவிந்தைத் (சூர்யா) தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டி விடுகிறார்கள். இதனால் அவருக்கு போதி தர்மரின் திறமைகளான போர்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.
சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பபடும் வில்லன் டொங் லீ , நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி சுபா.
நல்ல தரமான தெளிவான பிரதி பார்த்து மகிழுங்கள்
இணைப்பு : http://www.youtube.com/watch?v=5mP-FrCE3k0
( மேலே உள்ள இணைப்பினைக் கிளிக் (Click) செய்து திரைப்படத்தினைப் பாருங்கள்)
No comments:
Post a Comment