Blogger Widgets

Saturday, August 3, 2013

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன்... சுந்தரபாண்டியன் பாடல்

சுந்தரபாண்டியன்

சசிகுமாரின் அசிஸ்டண்ட் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், லக்‌ஷ்மி மேனன் ஜோடியாக நடித்திருக்கும் படம் ’சுந்தரபாண்டியன்’. இந்த படத்தின் தயாரிப்பாளரும் சசிகுமார் தான். துணைக் கதாபாத்திரங்களில்(!) தேசிய விருந்து பெற்ற அப்புகுட்டி, பரோட்டா சூரி, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநாதன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 இத் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் நெஞ்சுக்குள்ள....

 


நாயகியின் ஆசை கூறும் பாடல், சைந்தவியின் மயக்கும் உச்சரிப்பில் மனதைப் பதம் பார்க்கிறது. தாமரையின் எழுத்துகள் பாடலுக்குக் கூடுதல் பலம்! ஒவ்வொரு வரி முடிவிலும் வார்த்தையை இழுத்துப் பாடியிருக்கும் விதம் அருமை!

"பட்டாம் பூச்சி நான் என்றால், எட்டுத் திசை நீயே!... எந்தப் பக்கம் போனாலும் நீதான் நிற்பாயே!" எனச் சிறகடிக்கும் வரிகள் இதம்.
 
 
 
பாடிப் பார்க்க பாடல் வரிகள்...

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன் ஆசை
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இல நெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சம் என்று சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
[நெஞ்சுக்குள்ள .. ]
ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே
ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்பாயே
பட்டாம் பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே
எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிற்பாயே

மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட
பட்டு சேலை பல நூறு பாலா கிடக்கு
பக்கதுல நான் தூங்க பத்த மட பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் எங்க நாளும் போகுது
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன் ஆசை
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
முள்ளு தட்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிற்பாயே
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைகேரும்
என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வைப்பாயே
பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆசை
மொட்டு போல முகம் கூப்பி உள்ள மறைப்பேன்
நெஞ்சுக்குழி மேலாக தாலி கோடி நான் தேட
மஞ்ச தண்ணி நீரோட எப்போ வருவ …
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இல்ல நெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சம் என்று சொல்லாமல் சொன்னே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட …

 
பாடிப் பாருங்கள்.....


No comments:

Post a Comment