Blogger Widgets

Friday, September 6, 2013

யம்மா யம்மா காதல் பொன்னம்மா... yamma yamma kadhal... 7am arivu full song


யம்மா யம்மா காதல் பொன்னம்மா....

 yamma yamma kadhal...  7am arivu full song



படம் : ஏழாம் அறிவு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: கபிலன்



இணைப்பு http://www.youtube.com/watch?v=JshY46qGSwY




பாடிப் பார்க்க...பாடல் வரிகள்


யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாலே
என் மூச்சு காத்த வாங்கி போனாளே

பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்னை கண்ணைக்கட்டி கூட்டி போங்கடா

பாடிப் பாருங்கள்.....

ஏழாம் அறிவு திரைப்படத்தினை இந்த இணைப்பில் பார்க்கலாம்...

இணைப்பு : http://paarungkal.blogspot.com/2013/07/7aum-arivu-tamil-full-movie.html

பாருங்கள்.....

No comments:

Post a Comment