Blogger Widgets

Wednesday, March 23, 2016

கூகிள் வீதி பார்வை - எப்படிப் பார்ப்பது ? | How to watch Google street view ? Tamil

கூகிள் வீதி பார்வையூடாக (google street view) தற்பொழுது நமது ஊரின் அனைத்து பகுதிகளையும் ( பெரும் பாலான பகுதிகளை) மிகவும் துல்லியமாக பார்க்க  முடிகின்றது.

நீங்களும் ஒரு முறை நமது ஊரின் அழகினைப் பாருங்கள்....

பார்க்க முடியாதவர்களுக்கு இதனை ( கூகிள் வீதி பார்வை) எப்படிப் பார்க்கலாம் என ஒரு இலகு வழிகாட்டி.....

முதலில் உங்கள் உலாவியைத்  ( browser ) திறந்து கொள்ளுங்கள்.




முகவரியில்  http://www.google.com/maps/streetview   அல்லது,  http://www.google.com/maps
என தட்டச்சு செய்யுங்கள் அல்லது  மேலுள்ள முகவரியைக் கிளிக் செய்யுங்கள்.

கீழுள்ள வாறு திரை தோன்றும்.

வலது மூலையில் உள்ள வட்டத்தினுள் காணப்படும்  மூன்றில்  நீங்கள் பாவிக்கும் சாதனத்தைத் தெரிவு செய்யுங்கள். ( நான் கணினியைத் தெரிவு செய்கின்றேன்.)




தெரிவு செய்ததும்,  திரை பின்வறுமாறு தோன்றும்,


மேலே சிவப்பு வட்டமிடப்பட்ட பகுதியினுள் உங்கள் ஊரின் அல்லது நகரின் பெயரினை உள்ளிடுங்கள். நான் எனது ஊரினை உள்ளிடுகின்றேன்.  உள்ளிடும் போதே பட்டடியல் தெரியும்  அதில் நீங்கள் தேடும் ஊர் அல்லது நகரம் இருந்தால் அதனை கிளிக் செய்யுங்கள். இங்கு நான் எனது ஊர் பாடசாலையைக் கொடுத்துள்ளேன். 


கொடுத்ததும் நீங்கள் கொடுத்த இடம் காண்பிக்கப்படும்.

அவ்வாறு காண்பிக்கும் போது கணனித் திரையின் வலது கீழ் மூலையில்  Browse street view Images என்னும் சின்னத்கைக்   கிளிக் செய்யுங்கள்.



காண்பிக்கப்படும் வரைபடத்தில்  street view காண்பிக்க முடியுமான வீதிகள்  மட்டும் இளநீல நிறத்தில் காண்பிக்கப்படும். ( இவற்றை மட்டுமே நீங்கள் 360 பாகையில் பார்க்கலாம்)





இப்பொழுது நீங்கள் தேடிய இடம் காண்பிக்கத் தயார் நிலையில் காணப்படும். இளநீலக் கோட்டின் மீது கிளிக் செய்து,  உங்களுக்கு விரும்பிய இடத்திலிருந்து, நீங்கள் உங்கள் விருப்பம் போல  360 பாகையில் பார்த்து மகிழலாம்.

முன்னால், பின்னால் , இடம், வலம் செல்ல  அம்புக் குறி காட்டும் பக்கத்தினைக் கிளிக் செய்யுங்கள்.  அல்லது, திரையின் வலது கீழ் மூலையில் காணப்படும்  Rotate The View  என்னும் சுழலியைப் பயன்படுத்தி பாருங்கள்.

Rotate The View  என்னும் சுழலியைப் பயன்படுத்தி  விரும்பிய பக்கத்தினைப் பார்க்கலாம்.



மேலே காட்டப்பட்டுள்ள எமது மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலத்தினைக் காண  கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரியைக் கிளிக் செய்யுங்கள.
முகவரி :
 
 
இனி உங்கள் கைகளில் .......
விருப்பம் போலப் பாருங்கள்......
 
பாருங்கள்....

 

கூகிள் வீதி பார்வை- மன்னம்பிட்டி. | Google street view- Manampitiya

கூகிள் வீதி பார்வையூடாக (google street view) தற்பொழுது நமது ஊரின் அனைத்து பகுதிகளையும் ( பெரும் பாலான பகுதிகளை) மிகவும் துல்லியமாக பார்க்க  முடிகின்றது.

நீங்களும் ஒரு முறை நமது ஊரின் அழகினைப் பாருங்கள்....

மாதிரிக்கு சில காட்கிகளும் அவற்றின் முகவரிகளும்  கீழ் காணப்படும் முகவரிகளைக் கொப்பி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யுங்கள்...  கண்டு களியுங்கள்....

விரும்பிய திசைக்கு அம்புக் குறியின் உதவியடன் கொண்டு செல்லுங்கள்.....

மன்னம்பிட்டி நகரம்

 முகவரி: https://www.google.lk/maps/@7.9088013,81.1123159,3a,75y,270h,83.57t/data=!3m6!1e1!3m4!1sJS1CL9ekK9H0VOhSiKd4ZQ!2e0!7i13312!8i6656?hl=en



மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயம்

முகவரி:  
https://www.google.lk/maps/@7.9022545,81.1131399,3a,75y,152.52h,88.95t/data=!3m6!1e1!3m4!1sogmFK6dYo9XzTCrHldyRRQ!2e0!7i13312!8i6656?hl=en
 
நமது கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயில் e

நமது கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயில்


முகவரி:
https://www.google.lk/maps/@7.9088514,81.112077,3a,75y,180h,74.53t/data=!3m6!1e1!3m4!1sa9AKalJ4ElIws61GTCiarA!2e0!7i13312!8i6656?hl=en
 
 

 
 

இனி உங்கள் விருப்பம் போல் ஊரினைச் சுற்றி வாருங்கள்.......


பாருங்கள்......
 

Tuesday, March 22, 2016

பிச்சைக்காரன் திரைப்படத்திலிருந்து மூன்று சிறந்த பாடல்கள்... | Pichaikkaran tamil Film's Three Video Song

பிச்சைக்காரன் திரைப்படத்திலிருந்து   நீண்ட நாட்களுக்குப் பின்னர்   சிறந்த மூன்று பாடல்கள்

முதலாவது பாடல்

நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் .......



இணைப்பு: https://www.youtube.com/watch?v=fnlzqh7Zzs0

இரண்டாவது பாடல்

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் .......


இணைப்பு  : https://www.youtube.com/watch?v=guaGqSR4QE4

மூன்றாவது பாடல்:

உனக்காக வருவேன் உயிர்கூடத் தருவேன்.....



இணைப்பு : https://www.youtube.com/watch?v=8OUiNfAlpfk

பாருங்கள்.....