Blogger Widgets

Friday, October 31, 2014

சூரன் போர் - 2014 | Sooran Por

சூரன் போர் - 2014

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் இடம் பெற்ற சூரன் போர் 

( சூர சம்காரம் ) நிகழ்வுகள் உங்களுக்காககப் பாருங்கள்....



இணைப்பு:

பாருங்கள்.....

Tuesday, October 21, 2014

தீபாவளி வாழ்த்துக்கள் - 2014

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...



அன்புடன்,

http://mannampitiya.blogspot.com
http://mannampitiya.blogspot.com

Saturday, October 18, 2014

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான சங்காபிசேகம் - 2014

 
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள்  தேவஸ்தான சங்காபிசேகம் - 2014
 
மன்னம்பிட்டி, ( ஸ்ரீ லங்கா) அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில்   கடந்த எட்டாம் திகதி  (08.10.2014) அன்று  பௌர்ணமி தினத்தில் சங்காபிசேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனை ஆலய பூசகர்  குழந்தைல் ஐயா அவர்களும், சுதர்சன் சர்மா அவர்களும், நிரோஜன் சர்மா அவர்களும் நடத்தி வைத்தனர்.

உங்களுக்காகச் சில படங்கள்....

 
சங்காபிசேகம் - 2014
 



சங்காபிசேகம் - 2014
 


சங்காபிசேகம் - 2014
 



 
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
 
 
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.

பூசைப் பொருட்களை அலய பூசகர் குழந்தைவேல் ஐயா அவர்கள் பக்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றார்.
 
 

 
சங்காபிசேகத்தினை ஆகம முறைப்படி சுதர்சன் சர்மா அவர்களும்,
 நிரோஜன் சர்மா அவரகளும்  நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 
சங்காபிசேகத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்...

 

Friday, October 3, 2014

புத்தம் புதுக் காலை.... மேகா திரைப்படப் பாடல். Putham Pudhu Kaalai - Megha -Video Song

திரைப்டத்தின் கதை இதுதான்


நாயகன் அஸ்வின் படித்து முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தந்தை போலீஸ் அதிகாரியான விஜயகுமாரிடம் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

ஒருநாள் அஸ்வின் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும்போது எதேச்சையாக நாயகி சிருஷ்டியை பார்க்கிறான். அவளைப் பார்த்தவுடனேயே அவள் மீது காதலும் கொள்கிறான். அப்போது பெய்யும் மழையில் இருவரும் நெருக்கமாக நின்று ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில், சிருஷ்டியின் அண்ணன் திருமணத்துக்கு அஸ்வின் போட்டோ எடுக்க போகிறார். சிருஷ்டிக்கு 2 அண்ணன்கள். 2-வது அண்ணனுக்கு நடக்கும் கல்யாணத்திற்கு வந்திருக்கும் மூத்த அண்ணன், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதால் அந்த குடும்பமே அவரை வெறுத்து ஒதுக்குகிறது.

இதுதெரியாத அஸ்வின், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுக்கிறார். இதனால், சிருஷ்டியின் குடும்பத்திற்கு மூத்த அண்ணன் மீதிருந்த கோபம் சற்று தணிகிறது. இதற்கு காரணமாக இருந்த அஸ்வின் மீதும் தனிஈர்ப்பு உருவாகிறது.

இதை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு சிருஷ்டியிடம் சென்று காதலை சொல்கிறார் அஸ்வின். அவளும் அஸ்வினின் உண்மையான காதலை புரிந்துகொண்டு ஒத்துக்கொள்கிறார். இருவரும் காதல் ஜோடிகளாக உலா வருகின்றனர்.

ஒருநாள் இவர்களை சிருஷ்டியின் மூத்த அண்ணன் நேரில் பார்த்துவிடுகிறார். அப்போது, இவர்களை கண்டித்து செல்கிறார். இருந்தாலும், இருவரும் யாருக்கும் தெரியாமல் காதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், விஜயகுமார் மூலமாக போலீசில் தடவியல் நிபுணர் பணி அஸ்வினுக்கு கிடைக்கிறது. வேலை கிடைத்த மாத்திரத்தில் விஜயகுமாருக்கு கமிஷனராகும் அறிவிப்பு வருகிறது. மறுநாள் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது.

ஊடகங்கள் தற்கொலை என்று சொல்லி வரும்வேளையில், தடவியல் நிபுணரான அஸ்வின் அது தற்கொலை இல்லை கொலைதான் என்று கண்டுபிடிக்கிறார். அதை நிரூபிப்பதற்காக அவரை கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை கண்டுபிடிக்கிறார் அஸ்வின்.

இந்த தகவல்களையெல்லாம் திரட்டி உயரதிகாரியிடம் சமர்பிக்க ரெடியாக இருக்கும்போது சிருஷ்டியை மர்ம கும்பல் ஒன்று கடத்துகிறது. அஸ்வின் திரட்டி தகவல்களை எங்களிடம் ஒப்படைத்தால்தான் சிருஷ்டியை விடுவிப்போம் என்று மிரட்டல் விடுக்கின்றனர்.

இறுதியில் அஸ்வின் தான் திரட்டிய தகவல்களை அந்த கும்பலிடம் ஒப்படைத்து சிருஷ்டியை மீட்டாரா? அந்த மர்ம கும்பலுக்கும் அஸ்வின் திரட்டிய தகவல்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை விளக்கி கூறியிருக்கிறார்கள்.

***** நன்றி : 123தமிழ்சினிமா.கொம்  http://123tamilcinema.com/2014082932773.html

இந்த மேகா திரைப்படத்திலிருந்து ஒரு பாடல், பாடல் பழைய பாடல், படம் புதிது...

இணைப்பு : http://www.youtube.com/watch?v=mRWj5knSvC0




பாருங்கள்....